திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, குடும்ப தகராறில் மாமியாரை மருமகன் பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க சென்ற மாமியாரின் அக்காவையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.