Thiruvallur News | பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
திருவள்ளூர் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் வடிவேல் என்பவர் போலி மருத்துவம் பார்த்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா நேரில் சென்று ஆய்வு செய்தார். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து வடிவேலை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஆங்கில மருந்துகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.