திருவள்ளூரில், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சரின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் ஆட்டோ மீது விழுந்ததில், சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். திருவள்ளூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், அவர்களை வரவேற்க சாலையோரம் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட்களில் ஒன்று, பலத்த காற்றில் ஆட்டோ ஒன்றின் மீது விழுந்தது.