தாலிக்கட்டி திருத்தணி கோயில் வந்த புது ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்... பதறியடித்து ஓடிவந்த உறவினர்கள்
தாலிக்கட்டி திருத்தணி கோயில் வந்த புது ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்...பதறியடித்து ஓடிவந்த உறவினர்கள்
திருத்தணியில் திருமணம் முடிந்து சில மணி நேரத்திலேயே சாலை விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட நால்வர் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூரை சேர்ந்த பாலாஜிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில் புதுமண தம்பதி, உறவினர் புனிதா, ஆகியோர் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கும்போது காட்ரோடு அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கோவில் இரும்பு கேட் மீது மோதியது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.