"திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை"-புதிய உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 30ம் தேதி முதல்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் வரும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் அதேநேரம்
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.