விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில், ஊருக்குள் பணிபுரியவிடாமல் தங்களை ஊர்மக்கள் அவமதிப்பதாக கூறி, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட மோதலையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, இரு தரப்பினருக்கும் வழிபட அனுமதி அளித்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர், அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊர்மக்கள் அவமதிப்பு செய்கின்றனர் எனக் கூறி அவர்கள் அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளனர்.