பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர்கள் கூறியிருப்பதற்கு, அவர்கள் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதில் அளித்தார். திமுகவை எதிர்த்து பல கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும், திமுக எதையும் தாங்கும் என்றும் அவர் உறுதியாக பதில் அளித்தார்.