மாட்டை வேட்டையாடிய புலி - சுற்றுலா பயணிகள் பார்த்ததும் மாட்டை இழுத்து சென்ற வைரல் வீடியோ
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பசு மாட்டை வேட்டையாடி உண்பதற்காக காத்திருந்த புலி, சுற்றுலா பயணிகளை பார்த்ததும் மாட்டை இழுத்துச் சென்று மறைத்து வைத்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. மசினகுடி மாயார் பகுதியில் உள்ள ராட்சத குழாய் மீது புலி ஒன்று படுத்திருந்தது. அதன் கீழ் பகுதியில் மாடு ஒன்று இறந்து கிடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி வீடியோ எடுத்தபோது புலி கீழே இறங்கி வேட்டையாடி வைத்திருந்த மாட்டை அங்கிருந்து இழுத்துச் சென்று பத்திரமாக மறைத்து வைத்தது . அந்த காட்சிகள் தற்போது இனையத்தில் அதிகம் பரவி வருகிறது.