ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி.. குடும்பம் குடும்பமாக குவியும் டூரிஸ்ட்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு வருகின்றனர். தொடர் அரசு விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், திற்பரப்பு அருவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அருவி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் விழாகோலம் பூண்டுள்ளது.