நேற்று முன்தினம் கொட்டிய மழை... சாக்கடையோடு கலந்து வடியாமல் நிற்கும் நீர் - திண்டாடும் மக்கள்

Update: 2025-07-19 06:11 GMT

சென்னை பூந்தமல்லி பைபாஸ் சர்வீஸ் சாலையில் மழைநீரோடு கழிவுநீர் கலந்ததால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். வியாழனன்று பெய்த கனமழை காரணமாக பூந்தமல்லி பைபாஸ் சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியது. தற்போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமமடைந்துள்ளனர்.

உடனடியாக பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்