அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவளித்த கட்சி | பரபரக்கும் அரசியல் களம்
த.வெ.கவிற்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவு
தமிழக வெற்றி கழகத்திற்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக பொதுசெயலாளர் ஆனந்தை ஜன நாயக முஸ்லிம் கட்சியின் நிறூவனர் தமீம் நேரில் சந்தித்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். குறிப்பாக10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கூட்டணியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2026 பொதுத்தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு அளித்து பணியாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.