"இலங்கை இனப்படுகொலையை பற்றி பேசிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி" சீமான் பேச்சு

Update: 2025-05-19 14:16 GMT

நாம் தமிழர் கட்சி மட்டும் இல்லை என்றால் இலங்கை இனப்படுகொலையை பற்றி பேச ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்கள் என்று, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா திடலில், நடைபெற்ற தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மனோரன்ஹ்சன் பியாபாரி, எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சீமான், தமிழர் என்ற உணர்வை இழந்ததால் சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி மட்டும் இல்லை என்றால் இலங்கை இனப்படுகொலையை பற்றி பேச ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்