"நீ கொலைகாரன்" எனக்கூறிய மூதாட்டி...இரும்பு கரண்டியால் அடித்துக்கொன்ற நபர்
ஓமலூர் அருகே, "நீ கொலைகாரன்" என்று கூறியதால் மூதாட்டியை அடித்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் கருக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தாரமங்கலம் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ராஜம்மாளின் உறவினரான செல்வராஜ் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், செல்வராஜை “நீ கொலைகாரன்“ இங்கே வராதே என ராஜம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த செல்வரஜ் இரும்பு கரண்டியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். செல்வராஜ், 2022-ல் தனது நண்பனை கொலை செய்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது