``இறங்குனா சம்பவம் உறுதி’’ - ஈபிஎஸ் கூட்டத்தில் பரபரப்பை கிளப்பிய வார்த்தை
செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் பேனர்
அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமான நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொண்டர்கள் பேனர் வைத்து ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். முன்னதாக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், “உதிரம் கொடுத்து உழைக்க எங்கள் எடப்பாடியார் இருக்க, உண்டு கொழுக்க நினைக்கும் உதிரிகளை இணைக்க நினைப்பது எதற்கு“ என்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து எடப்பாடி ஆதரவு தெரிவித்துள்ளனர்.