விரட்டி விரட்டி வந்த கொம்பு - மெரினாவில் அலறி ஓடிய மக்கள்.. பகீர் காட்சி
மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை முட்டுவதற்கு பாய்ந்த மாடு - பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை திடீரென துரத்திய காளை மாட்டினால் பரபரப்பு ஏற்பட்டது. விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை மணற்பரப்பில் அங்கு சுற்றித் திரிந்த மாடு ஒன்று கடற்கரையில் அமர்ந்திருந்த பொதுமக்களை நோக்கி திடீரென வேகமாக துரத்தியும், சிலரை முட்டவும் பாய்ந்ததால் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சூழலில், கடற்கரையில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் உள்ளிட்டவை, சுற்றுலா பயணிகளை தாக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.