பள்ளி சிறுமிகளுக்கு தலைமை ஆசிரியர் செய்த கேடுகெட்ட செயல் | கொந்தளித்த மக்கள்

Update: 2025-09-07 12:04 GMT

மதுபோதையில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முத்தமிட்டதாக புகார்

ஆம்பூர் அருகே மது போதையில் பள்ளி மாணவிகளுக்கு முத்தமிட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மேல்சானா குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பாரத் அம்பேத்கர் என்பவர் மது போதையில் 5ஆம் வகுப்பு மாணவிகளை மடியில் அமரவைத்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து வட்டார கல்வி அலுவலர், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்