முதியவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம்.. பாம்புக்கடி மருந்து கொடுத்த மருத்துவர்..
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்த சிகிச்சைக்காக சென்ற மாதேஸ்வரன் என்ற முதியவருக்கு, மருத்துவர்கள் பாம்புக்கடிக்கு மாத்திரைகள் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது உயிருக்கு போராடி வரும் அவரை காப்பாற்ற உதவுமாறு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 23 வயது இளைஞரின் மருந்துகளை மாற்றி தந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.