கோவை கார் குண்டுவெடிப்புக்கு `கோவிட்டை’ பயன்படுத்திய குற்றவாளிகள்

Update: 2025-04-18 06:39 GMT

கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில், ஷேக் ஹிதயாத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரஹ்மான், ஷரண் மற்றும் அபு ஹனிபா ஆகியோர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இவர்கள் போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் மற்றும் தேவையான கருவிகளை வாங்கி உள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்