``தைலம் - கற்பூரம் கலந்து தேய்த்ததால் குழந்தை சாகல''..தமிழகமே பயந்த விஷயத்தில் திருப்பம்
கற்பூரம், தைலம் தேய்க்கப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், ஏற்கனவே குழந்தைக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவரின் 8 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தைக்கு சளி இருந்ததால் கற்பூரத்துடன் தைலம் சேர்த்து தேய்க்கப்பட்டதே காரணம் என கூறப்பட்ட நிலையில், குழந்தை பிறக்கும் போதே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.