கோலாகலமாக நடைபெற்ற குன்னூர் மலையாள மக்களின் 80-வது முத்துப்பல்லக்கு விழா
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலையாள மக்களின் முத்துப்பல்லக்கு விழா 80வது ஆண்டாக கோலாகலமாக நடைபெற்றது. ஊர்வலத்தில் கும்ப கலசங்கள், கதைகளை வெளிப்படுத்தும் கடவுள்களின் உருவங்கள் இடம் பெற்றன. பக்தர்கள் பாரம்பரிய உடைகளில் நடத்திய கலாசார நிகழ்ச்சிகளை திரளானோர் கண்டு களித்தனர்.