அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம்

Update: 2024-12-30 01:54 GMT

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ரவுடி ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். எப்படி வெளியானது என்பது குறித்த தகவலை பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தவும், எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தில் 14 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, ஞானசேகரனால் வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பன குறித்தும், ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்தும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்