தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு... வெளியே கசிந்த தகவல்-உடனே சக மாணவர்கள் எடுத்த முடிவு

Update: 2025-07-21 17:00 GMT

தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு... வெளியே கசிந்த தகவல் - உடனே சக மாணவர்கள் எடுத்த முடிவு

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவன் ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாகா கமிட்டியில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில், விசாரணை நடைபெற்று, சம்பந்தப்பட்ட மாணவரை ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த மேல்நடவடிக்கைக்கு மருத்துவக் கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது என முதல்வர் பாலசுப்பிரமணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, மாணவிக்கு பாலியல் தொந்தரவு என தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்