Thanjavur | Leave Update | ஜனவரி 7ல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் 179ம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, ஜனவரி 7ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு மாற்றாக, ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.