ஜன.10, ஜன.11 - சென்னை, புதுச்சேரி ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, புதுச்சேரி ஈசிஆரில், வருகிற 10ம் தேதி இரவு முதல் மறுநாள் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்ன் மேன் 5150 டிரையத்லான் - சென்னை இம்பேக்ட் (IRON MAN 5150 TRIATHLON - CHENNAI IMPACT) என்னும் விளையாட்டு போட்டி வருகிற 11ம் தேதி, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது.
இதனால் சென்னை பாண்டிச்சேரி மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் முதல் சூளேரிக்காடு வரை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட உள்ளது.
எனவே பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும், பூஞ்சேரி ஆலத்தூர் பைபாஸ் (OMR), கேளம்பாக்கம் வழியாக செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆலத்தூர் பைபாஸ் பேரூர் சந்திப்பு வழியாக, கிழக்கு கடற்கரைச் சாலையை அணுகும் இணைப்பு சாலை, முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாண்டிச்சேரி சென்னை மார்க்கமாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இலகுரக வாகனங்கள் இரு வழி தடங்களாக குறிப்பிட்ட நேரம் வரை, பூஞ்சேரி, மாமல்லபுரம், கோவளம் வழியாக அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.