Car | Police | விபத்தான காரில் இருந்ததை பார்த்து போலீசார் ஆத்திரம்

Update: 2026-01-09 09:40 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

எலவனாசூர்கோட்டை வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு சோதனை செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்