Thalassemia Disease | யாருக்குமே வராத அரிய கொடிய நோய் - 15 நாளுக்கு ஒருமுறை ரத்தம் மாற்றாவிட்டால்..
10 வயது சிறுமிக்கு தலசீமியா நோய் - உதவி கோரும் பெற்றோர்
தர்மபுரி மாவட்டம் சித்தேரி அடுத்துள்ள கலசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அருள்நாதன். இவரது 10 வயது மகள் பூர்ணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிறந்த 7 மாதத்திலிருந்தே, இந்நோயால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை இரத்த மாற்றம் செய்யப்படுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தாலசீமியா நோயை குணப்படுத்தலாம். இதனால் அறுவை சிகிச்சைக்காக தமிழக அரசு உதவ வேண்டுமென, பூர்ணியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.