திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுத்துறை அதிகாரிகளுடன் வருவாய் கோட்டாட்சியர் கெளதம் ஆலோசனை நடத்தினார்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும், ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்பு படகுகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.