பெரம்பலூர் அருகே ரவுடி கொட்டுராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அனிதா தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் ரவுடி கொட்டு ராஜா என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.