பேரழிவில் காணாமல் போன மகள் - சொல்லி சொல்லி கதறும் தாய்.. நெஞ்சை உலுக்கும் காட்சி
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், நிலநடுக்கத்தால் புதிதாக கட்டப்பட்டு வந்த பல மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதை அடுத்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர் மாயமான நிலையில், மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த அவரது தாயார் கதறி அழுதது, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது...