Fire Accident | ஹார்டுவேர் கடையில் பயங்கர `தீ' விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கரும்புகையால் மூழ்கின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கொழுந்து விட்டுப் பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்
இந்த தீவிபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் உட்பட, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.