Tenkasi | விபத்தில் தாய் மரணம்.."இனி எப்படி போவேன்னு தெரியல.." - கதறி அழும் பார்வை மாற்றுத்திறனாளி
- விபத்தில் உயிரிழந்த தாய் - கதறி அழும் பார்வை மாற்றுத்திறனாளி
- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, தனியார் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பார்வை மாற்றுத்திறனாளி பெண், தன் தாயை பிரிந்து அழும் காட்சி காண்போர் நெஞ்சை கனக்கச் செய்துள்ளது. புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் தன் பார்வையற்ற மகளுடன் வசித்து வந்த நிலையில், கடையநல்லூர் தனியார் பேருந்து விபத்தில் உயரிழந்துவிட்டார். இந்த நிலையில் இவரது பார்வை மாற்றத்திறனாளி மகள் கீர்த்திகா வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார். பட்டப்படிப்பு படித்துள்ள அவர், முதல்வர் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.