சேலம் அருகே கோயில் திருவிழா | பால்குட ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசம் | Omalur
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஜோடுகுளி ஓம் காளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதளுடன் தொடங்கியது. முதல் நாள் நடந்த
பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் பம்பை மேளம் முழங்க பக்தர்கள் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பெண்கள் சிலர் அருள் வந்து ஆடினர்.