"தமிழக வரிப்பணம் வடமாநிலங்களுக்கு போகுது" அமைச்சர் சிவசங்கர் சொன்ன திடுக் தகவல்
தமிழகத்தின் வரிப்பணத்தை வடமாநிலங்களுக்கு பிரதமர் மோடி வாரி வழங்குவதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூரில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்கள் அளிக்கும் வரிப்பணத்தை வடமாநிலங்களுக்கு வாரி வழங்கும் பிரதமர் மோடி, தமிழகத்தை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினார்.