தமிழகத்தில் முடிவுக்கு வந்தது வடகிழக்கு பருவமழை..! இனி மழை இருக்குமா..?

Update: 2025-01-27 06:23 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, கேரளா மாஹே, கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, வடக்கு உள் கர்நாடகாவில் இருந்தும் விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஃபெஞ்சல் புயல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் 2024-ல் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்