"ஓரணியில் தமிழ்நாடு" புதிதாக 38 லட்சம் பேர் திமுக உறுப்பினராக இணைப்பு
"ஓரணியில் தமிழ்நாடு" என்ற பரப்புரை இயக்கம் மூலம் திமுகவில் புதிய உறுப்பினர்களாக 38 லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதனை ஜூலை 1ம் தேதி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகிகள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், "ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரை மூலம் புதிதாக 38 லட்சத்து 75 ஆயிரத்து 112 பேர் திமுகவில் இணைந்துள்ளதாகவும்,
ஏற்கனவே உறுப்பினராக உள்ள 23 லட்சத்து 23 ஆயிரத்து 528 பேர் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளதாகவும் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.