சூறாவளி காற்றுடன் கொட்டிய கோடை மழை..குளு குளுவென மாறிய கிளைமேட்

Update: 2025-05-02 02:36 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென பெய்த மழையால், வெப்பம் சிறிது தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கன மழை பெய்தது..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பலத்த காற்றால் 5க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பர்கூர் பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதே போல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்