திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலான 10 பைக்குகள் -போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி
சென்னை நீலாங்கரையில் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.. சென்னை J8 நீலாங்கரை காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக உபயோகமற்ற நிலையில் இருந்த, ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஈஞ்சம்பாக்கம் மைதானத்தின் அருகில் உள்ள காலி மனையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீயினால் சுமார் 10 இருசக்கர வாகனங்களும் கருகின. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.