4 வயது சிறுவன், 8 வயது சிறுமி... சுருண்டு விழுந்து பலி- குழந்தைகள் உயிரை பறிக்கும் மாரடைப்பு

Update: 2025-01-19 06:57 GMT

நாடு முழுவதும் அண்மைக்காலமாக திடீர் மாரடைப்பால்

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கான காரணம் மற்றும்

தற்காத்துக்கொள்ள பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி மருத்துவர் தரும் விளக்கத்தை பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்.

ஜனவரி 6 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூருவில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி பள்ளி வளாகத்திலேயே மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் விளையாட்டு பயிற்சியின்போது 4 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தெலுங்கானாவின் மஞ்சேரியல் பகுதியில் ஆறாம் வகுப்பு படித்துவந்த கஸ்தூரி நிவ்ருதி என்ற 12 வயது சிறுமி,

நவம்பர் 15ஆம் தேதி பள்ளிக்குப் புறப்பட்டபோது

வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம், தௌசா (Dausa) மாவட்டம், பண்டிட்புராவில்

(Panditpura) 10ஆம் வகுப்பு படித்துவந்த யதேந்திர உபாத்யாய் என்ற

16 வயது சிறுவனும் பள்ளியில் மாரடைப்பால் மயங்கி

விழுந்து உயிரிழந்தார்.

பொதுவாக பெரியவர்களுக்குத் தான் மாரடைப்பு ஏற்படும்

என்ற நம்பிக்கை நிலவும் நிலையில், அண்மைக்காலமாக

10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பலரும் திடீர் மாரடைப்பால்

உயிரிழந்து வருவது மக்களிடையே பதற்றத்தைக் கூட்டியுள்ளது.

ஆனால், மருத்துவ உலகம் இவ்வாறான திடீர் மரணங்களை கார்டியாக் அரெஸ்ட் அதாவது இருதய செயலிழப்பு என்று வரையறுக்கிறது.

இருப்பினும், குழந்தைகளிடத்தில் தென்படும் சில மாற்றங்களை

கண்டுபிடித்தால் உடனே சுதாரித்துக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்