12 காவலர்கள் திடீர் பணியிட மாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு காவல்துறையில் 12 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 12 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு DSP-ஆக பணியாற்றிய சுரேஷ்குமார், தியாகராய நகர் காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போதை நுண்ணறிவு பிரிவு DSP-ஆக பணியாற்றிய ராகவி, சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.