சாலையில் விழுந்த திடீர் பள்ளம்.. நட்டு வைத்த மரம் - அதிர்ந்து போன வாகன ஓட்டிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரண்டு பக்க சாலைகளிலும் திடீரென 3 அடி அளவிலான பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை மூடுவதற்கு பதிலாக அட்டையயை வைத்து சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மரக்கிளையை உடைத்து வாகன ஓட்டியர்களுக்கு தெரியும் வண்ணம் அந்தப் பள்ளத்தில் நட்டு வைத்து சென்றார்.