சென்னை-திருச்சி NH-ல் திடீர் பரபரப்பு...பஸ் மோதி தலைகுப்புற கிடக்கும் கார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசு பேருந்து மோதியதில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. சித்தனியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நெய்வேலியை சேர்ந்த சக்திவேல் தனது மகளை சேர்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அப்போது நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.