2026 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2025-12-30 13:41 GMT

2026ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில்

பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் குடியரசு தினவிழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பசுமை மின் சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தி இடம் பெறாத நிலையில், 2024ல் குடைஓலை முறை குறித்து அலங்கார ஊர்தி குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது.

Tags:    

மேலும் செய்திகள்