போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

Update: 2025-12-30 13:50 GMT

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, 4வது நாளாக போராட்டம் நடத்திய ஆயிரத்து 285 இடைநிலை ஆசிரியர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்