ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் மாற்றம்

Update: 2025-07-02 09:06 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70ஆயிரம் கன அடியில் இருந்து 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் தடை விதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்