மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் - ரயில்வே திட்ட இயக்குநர் ஆய்வு
மதுரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் திருமங்கலம் அணுகுசாலையில் தேசிய நெடுஞ்சாலை மையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சிப்காட் மற்றும் தோப்பூர் சந்திப்புகளில் வாகனங்கள் செல்ல 2 சுரங்கப்பாதைகளை அமைக்க முன்மொழிந்ததால் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்த நிலையில், மெட்ரோ ரயில் தூண்கள் மற்றும் நிலையங்களை உயர்த்துவது, வழித்தடத்தை மாற்றுவது போன்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. மேலும் வழித்தடத்தை மாற்றியமைக்கும்போது, நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம், எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.