சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருமடங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2025–26 ஆம் கல்வி ஆண்டில் இதுவரை 15,618 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட இருமடங்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களை ஈர்க்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அதிகபட்சமாக யூகேஜியில் 7,386 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதே போல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆழ்வார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்