திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க வந்தவர்களுக்கு, மட்டன் குழம்பு, சிக்கன் சிந்தாமணி வறுவல், குடல் வறுவல் என தடல் புடல் விருந்து வைத்திருக்கிறார்கள். மொரட்டு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சப்பட்டநாயக்கன் பாளையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம், திருமண விருந்து போல நடந்து முடிந்திருக்கிறது. காலை முதலே தேநீர், காப்பி பஞ்சமே இல்லாமல் வழங்கியிருக்கிறார்கள். 4 ஆட்டுக்கிடாய்கள், 150 கிலோ சிக்கன், 2,500 முட்டைகளுடன் தயாரான மதிய உணவை, மனு அளிக்க வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று சாப்பிட்டு சென்றனர்.