வெள்ளி யானையில் எழுந்தருளிய நம்பெருமாள் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோயிலில் மாசித்தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 6 வது நாள் விழாவின் போது, நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.