தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சனை - ரூ.40 லட்சம் மோசடி புகாரில் தொடங்கிய நடவடிக்கை
தென்னிந்திய நடிகர் சங்க முகவரியை பயன்படுத்தி 40 லட்சம் வரை மோசடி
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க முகவரியை பயன்படுத்தி, லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் மேலாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன், நடிகர் சங்க உறுப்பினர் சங்கர் பாபு, முன்னாள் சங்க உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் நடிகர் சங்கத்தின் முகவரியை பயன்படுத்தி EVER GREEN MEDIA என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த நிறுவனத்தின் பேரில் வங்கி கணக்குகள் தொடங்கி, 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் தற்போது மேலாளராக உள்ள தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.