Troll செய்யப்படும் சிவகார்த்திகேயன் | அறிமுக இயக்குனர்கள் வருத்தம்

Update: 2025-05-21 09:27 GMT

சிவகார்த்திகேயன் ட்ரோல் - அறிமுக இயக்குனர்கள் வருத்தம்

பல படங்களை பார்த்து பாராட்டுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்ரோல் செய்யப்படுவதற்கு, ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தங்களைப் போன்ற அறிமுக இயக்குனரின் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திரையுலகில் இருக்கும் நட்சத்திர நடிகர்கள் அதை பார்த்துவிட்டு பாராட்டி ஒரு ட்விட்டோ அல்லது பேட்டியோ கொடுப்பது அந்த படத்திற்கு எந்த அளவுக்கு பெரிய சப்போர்ட்டை கொடுக்கும் என்பது தம்மை மாதிரியான அறிமுக இயக்குனர்களுக்கு புரியும் என்று கூறியுள்ளார்.

இதற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்